தன் கிளாமர் உடையால் ஹாலிவுட் நடிகர்களையே தன் பின்னால் அலையவிட்ட கியாரா
பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை கியாரா அத்வானி. வெறும் பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய படங்களிலும் கியாரா மும்மரமாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக இவர் தான் நடித்து வருகிறார்.
கியாரா நன்றாக வளர்ந்து வரும் போதே பிரபல நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை திருமணம் செய்தார். திருமணத்திற்கும் பிறகும் படு பிஸியாக கியாரா நடித்து வருகிறார். அதிலும் முன் போல் இப்போதும் குறையாத கிளாமர் உடைகளை தான் அணிந்து வருகிறார்.
இந்நிலையில் கியாரா சமீபத்தில் கேன்ஸ் பட விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு அவர் அணிந்து வந்த உடையில் மயங்காதவர்களே இல்லை. பல ஹாலிவுட் நடிகர்கள் கியாராவிடம் வந்து பேசி புகைப்படம் எடுத்துள்ளனர், மேலும், இந்த நிகழ்வு மூலம் கியாரா ஹாலிவுட் திரையுலகில் காலாடி எடுத்து வைத்தாலும் ஆச்சரியமில்லை என்றே கூறப்படுகிறது.