ரகசியமாக வைத்திருந்த காதல்!! தோனி பட நடிகையை திருமணம் செய்கிறார் பிரபல நடிகர்..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கியாரா அத்வானி. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

கியாரா அத்வானியுடன் சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்யோத்ரா பல படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக பழகி லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியது.
இதை பல இடங்களில் இருவரும் ஜோடியாக சென்று ரொமான்ஸ் செய்துள்ள வீடியோக்களும் வைரலானது. இந்நிலையில் கியாரா அத்வானி - சித்தார்த் மல்யோத்ரா வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்சாலிமர் பேலஸ் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாம்.
திருமணத்திற்கான ஆடை குறித்து விவாதிக்க ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் இல்லத்திற்கு நடிகை கியாரா அத்வானி சென்றுள்ளாராம். திருமண செய்தியை தொடர்ந்து பாலிவுட் சினிமாவே காத்திருக்கிறது.