காதலை கூற ஏன் பயப்பட வேண்டும்!! கிருத்திகா உதயநிதி போட்ட பதிவு
தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைவராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சரானதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
அவரது மனைவி சினிமாவில் இயக்குனராக திகழ்ந்து வருபவர் என்பதால் உதயநிதிக்கு பதில் கிருத்திகா ரெட் ஜெயண்ட் பொறுப்பை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் உதயநிதியின் மகன் இன்பநிதி தன் தோழியுடன் நெருக்கமாக எடுத்த மிரர் புகைப்படம் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை பலர் விமர்சித்து கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று இணையத்தில் விவாதங்களையும் செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்பநிதியின் தாய் கிருத்திகா ஒரு டிவிட்டை பகிர்ந்துள்ளார். காதலை வெளிப்படத்த யாரும் பயப்பட வேண்டாம் என்றும் இயற்கையின் மகத்துவத்தை அது புரிந்து கொள்ளும் ஒரு வழி இதுவும் ஒன்று என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கும் ஒருசிலர் அந்த புகைப்படத்தை பார்த்து தான், இப்படி ஒரு கருத்தை போட்டாரா என்று விமர்சித்து வருகிறார்கள்.
Don't be afraid to love and express it. It's one of the ways to understand nature in it's full glory.
— kiruthiga udhayanidh (@astrokiru) January 5, 2023