மைண்ட் வாய்ஸ்னு நினைச்சிட்ட! உதயநிதி பற்றி பேசிய அமைச்சர் நேரு..

cm mkstalin udhayanidhi-stalin knnehru
By Edward Dec 15, 2021 01:05 PM GMT
Report

தமிழக அரசின் தற்போதைய திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்று பலர் கூறக்கேட்டு இருக்கிறோம். அதற்கு ஏற்ப வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அப்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக் -திருவல்லிக்கேனி பகுதியின் எம் எல் ஏவாக இருந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் அவருக்கு முதல்வர் ஆகும் தகுதி உள்ளது என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.

அதற்கு தற்போதைய அமைச்சர் கேஎன் நேரு பேட்டியொன்றில் உளறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முதல்வர் அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

அன்பில் மகேஷ் கூறியது அவரது நண்பர் என்ற காரணத்தால் என்றும் அவரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது, அதைவிட கோலாறானவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.