விராட் கோலியால் ராயுடுவுக்கு நடந்தது அநியாயம்!! அதிர்ச்சி கொடுத்த ராபின் உத்தப்பா..
2024 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மோசமான பேட்டிங் ஃபார்ம்-ஐ கொடுத்த கோலி மற்றும் ரோஹித்தை கடுமையாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதில் நடிகர் விராட் கோலி, தொடர்ந்து அவுட் சைட் பேட்டிங் செய்து அவுட்டாகியது பலரும் விமர்சித்து வந்தனர்.
ராபின் உத்தப்பா
தற்போது முன்னால் இந்திய வீரரும் சிஎஸ்கே வீரருமான ராபின் உத்தப்பா விராட் கோலி குறித்த சர்ச்சையான கருத்தினை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ராபின் உத்தப்பா கொடுத்த பேட்டியொன்றில், முன்னாள் வீரர் ராயுடு அணியில் சேர்க்காமல் இருந்ததற்கு விராட் கோலி தான் காரணம் என்று கூறியுள்ளார்.
அதில், விராட் கோலிக்கு யாரெல்லாம் பிடிக்கவில்லையோ, அவர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றும் இதற்கு சரியான எடுத்துக்காட்டி அம்பதி ராயுடு தான் என்றும் கூறியிருக்கிறார். 2019 உலக கோப்பைக்கான ஜெர்சி, உபகரணங்கள் ராயுடுவின் வீட்டிற்கு எல்லாமே அனுப்பப்பட்டது.
ஆனால், கோலிக்கு அவரை பிடிக்காததால் அணியில் இடம்பெறவில்லை. என்னைப் பொறுத்தவரை இது மிகவும் தவறு, அநியாயம் என்று ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.