ஒரே படத்தில் ஹீரோயின்களை மயக்கிய ஹீரோக்கள்.. லிஸ்டில் அஜித்தும் இருக்கிறாரா?
அஜித் நடிப்பில் வெளியான அமர்க்களம் படத்தில் ஹீரோயினாக ஷாலினி நடித்திருப்பார். இப்படத்தின் ஷூட்டிங் போது ஏற்பட்ட நட்பு பின் காதலாய் மாறியது.தற்போது வரை இவர்கள் கோலிவுட் நட்சத்திர ஜோடியாக இருந்து வருகிறார்கள்.
கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து சாயிஷா நடித்திருந்தார். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் காதலித்தார்களாம். இதன் பின்னர் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
2017 -ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை த்ரில்லர் படமான மரகத நாணயம் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, கடைசியில் இருவரும் காதலில் விழுந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் இருவரும் தேவராட்டம் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் ஷூட்டிங்கில் இருவரும் நண்பர்களாக பழகி அதன் பின் காதல் மலர்ந்து. கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.