விஜய் ஓகே! அஜித்தா வேண்டவே வேண்டாம்? இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கி வரும் பிரபல நடிகை..

ajith vijay samantha kollywood nayanthara
By Edward Feb 16, 2022 03:55 AM GMT
Report

தமிழ் சினிமாவின் தற்போது இரு மார்க்கெட் நடிகர்கள் என்றால் அது அஜித் விஜய் தான். பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இவர்கள் படத்தில் சிறு கதபாத்திரத்தில் நடித்தாலே போதும் என்று பல நட்சத்திரங்கள் தவம் கிடப்பார்கள். அப்படி விஜய் படத்தில் நடித்த நடிகைகள் சிலர் அஜித் படத்தில் நடிக்காமல் இருக்கிறார்கள்.

சில காரணங்களால் நடிகைகள் தலதளபதி இருவரில் யாராவது ஒருவருடன் நடித்தால் போதும் என அவர்களிடன் படங்களில் தொடர்ந்து கமிட்டாகுவார்கள்.

அப்படி நடிகை சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி, அமலா பால் போன்ற டாப் நடிகைகள் விஜய் படத்திற்கு மட்டும் ஓகே கூறி நடித்து வந்துள்ளனர்.

ஆனால், அதில் நடிகை நயன்தாரா அஜித் படங்களுக்கு ஓகே தான் என்று கூறி விஜய் படத்தில் பல ஆண்டுகள் கழித்து பிகில் படத்தில் நடித்திருப்பார்.

அதுவும் சில கசப்பான காரணங்களை மறந்தபின் தான் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.