அப்பா மரணத்துக்கு கூட போகாத முடியாமல் போச்சு.. அதுக்கு இதுதான் காரணம்!! நடிகை கோவை சரளா
கவுண்டமணி, செந்தில், வடிவேலு இருந்த காலக்கட்டத்தில் பெண் காமெடி நடிகையாக திகழ்ந்தவர் மனோரம்மா. அவருக்கு அடுத்த அந்த இடத்தினை பிடித்தவர் தான் நடிகை கோவை சரளா. சிறு காமெடி ரோலில் வடிவேலுவுடன் நடித்து வந்த கோவை சரளா, பாலு மகேந்திரா இயக்கத்தில் சதிலீலாவதி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
கமல் ஹாசனுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் அவர் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கோவை சரளா, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட அரண்மனை 4 படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஊட்டியில் ஷூட்டிங்கிற்கு சென்ற போது கோவை சரளாவின் அப்பா இறந்திருக்கிறார். அப்போது சிறு தயாரிப்பு நிறுவனம் படம் என்பதால் ஷூட்டிங்கை நிறுத்த முடியாத நிலை இருந்ததுள்ளது அதனால் அப்பா இறப்புக்கு கூட போக முடியாமல் போயுள்ளது.
இதனை பணத்திற்காக தான் கோவை சரளா இப்படி செய்தார் என்று பலவிதமாக பேசியிருக்கிறார். இந்த தகவலை நடிகை கோவை சரளா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.