அதுக்காக தான் சரக்கு அடிப்பேன்..ஆனா!! சீரியல் நடிகை கிருத்திகா ஓபன் டாக்..
கிருத்திகா அண்ணாமலை
சின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை. வில்லி ரோலில் கலக்கி வந்த கிருத்திகா, தற்போது கார்த்திகை தீபம், மல்லி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில், விவாகரத்தானது. அப்போது குழந்தை பிறந்த 2 மாதத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன்பின் என் பெயர் உமா மகேஷ்வரி என்று தான் வெளியில் தெரியும் என்பதால் நான் தற்கொலைக்கு செய்ததாக உமா மகேஷ்வரி என்று தான் செய்திகள் வெளியானது என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், எப்போது சரக்கு அடித்தீங்க என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், நடிக்க தொடங்கிய போது அனைவருக்கும் ஒயின் குடித்தால் ஸ்கின் க்ளோவாக, பளபளவென்று நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதற்காக அப்பொழுதுதான் முதன்முதலாக ஒயின் குடித்தேன்.
தினமும் தூங்கும்போது கொஞ்சமாக ஒயின் குடித்துவிட்டு தூங்கினால் நிச்சயமாக நல்ல க்ளோ கிடைக்கும். அதிகமாக குடித்தால் பலன் தராது. என் 22வது வயதில் இருந்து தான் குடிக்கிறேன். எப்போவாவது, சரக்கு அடிப்பேன், அடிக்கடிலாம் குடிக்கமாட்டேன், ஏதாவது நிகழ்ச்சி என்றால் குடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார் நடிகை கிருத்திகா.