50 பேர் முன் அசிங்கப்படுத்தி அழ வைத்த இயக்குனர்!! உண்மையை உடைத்த தேசிய விருது நடிகை...
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை க்ரித்தி சனோன். 1 Nenokkadine என்ற தெலுங்கு படத்தில் சமீரா என்ற ரோலில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்த க்ரித்தி சனோன், அதன்பின் அடுத்தடுத்த தெலுங்கு மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து பிஸியாகினார்.
சமீபத்தில் நடிகர் பிரபாஸ்க்கு ஜோடியாக அதிபுருஷ் படத்தில் நடித்த க்ரித்தி, மிமி என்ற படத்திற்காக தேசிய விருதும் வாங்கியிருந்தார்.
தன் வாழ்க்கையில் கசப்பான சம்பவம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். சினிமா வாய்ப்பு தேடுவது, மாடலிங் என்று இருந்த போது மனிதர்களை பற்றி தெரியாமல் இருந்தேன்.
அப்போது மாடலிங்கில் அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் ஹை ஹீல்ஸ் போட்டு நடந்த போது எனது செருப்பு புல்லுக்குள் புதைந்து மிகவும் கஷ்டப்பட்டது.
இதனால் நடன இயக்குனர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டு கிட்டத்தட்ட 50 பேர் முன்னிலையில் என்னை கேவலப்படுத்தி திட்டினார். இதனால் எனக்கு அழுகை வந்ததாகவும் பயந்து பின்வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
என்னிடம் மோசமான நடந்து கொண்ட அந்த நடன இயக்குனருடன் பின் பணியாற்றவில்லை என்று க்ரித்தி சனோன் கூறியுள்ளார்.