தொழில் தொடங்கி 2 ஆண்டுகளில் ரூ. 400 கோடி வருமானம்!! குஷியில் பிரபல நடிகை..
க்ரித்தி சனோன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் க்ரித்தி சனோனின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. நடிகை க்ரித்தி சனோன் கடந்த 2014ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 1: Nenokkadine படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஹிந்தி பக்கம் சென்ற இவருக்கு அங்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிய க்ரித்தி சனோன், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். னுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய 35 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் க்ருத்தி, வருடத்திற்கு ரூ. 12 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார். ஒரு படத்திற்கு 2 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் க்ருத்தியின் சொத்து மதிப்பு 85 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
400 கோடி வருமானம்
மேலும் பல தொழில்களை செய்து சம்பாதித்து வரும் க்ருத்தி சனோனின், ஸ்கின்கேர் பிராண்ட்டான HYPHEN ஆரம்பித்து 2 வருடங்களில் ரூ. 400 கோடி மதிப்பை எட்டியிருக்கிறது.
இந்த தொழில் துவங்கிய 2 ஆண்டுகளில் க்ரித்தி சனோன், 400 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்திருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் இந்த செய்தியை பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

