என் இதயத்தில் பெரிய ஓட்டை.. பாடகி சித்ரா இறந்த மகள் பற்றி உருக்கம்
பாடகி சித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடி இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.
சித்ராவுக்கு தற்போது 60 வயதாகிறது. அவரது மகள் நந்தனா 2011 ஏப்ரலில் துபாய் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டார்.
மகளை டிவி பார்க்க வைத்துவிட்டு சித்ரா குளிக்க சென்ற நிலையில், அவர் கதவை திறந்து வெளியில் இருக்கும் நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டார். சில நிமிடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் சித்ரா அவரது மகளை இழந்துவிட்டார்.
உருக்கம்
இன்று மகள் நந்தனாவின் பிறந்தநாள் என்பதால் அவரது போட்டோவை வெளியிட்டு மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார் சித்ரா.
"என் இதயத்தில் பெரிய ஓட்டையை விட்டு சென்றுவிட்டாய், அதை எப்போதும் அடைக்க முடியாது. ஒவ்வொரு நாளும் உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன்" என சித்ரா பதிவிட்டு இருக்கிறார்.