கே.எஸ். ரவிக்குமார் மொத்த சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா, இதோ
சூப்பர்ஹிட் கமர்ஷியல் இயக்குனர் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் கே.எஸ். ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த முத்து, தசாவதாரம், பிஸ்தா, படையப்பா, தெனாலி உள்ளிட்ட பல படங்கள் என்றும் நம் மனதில் இருந்து அழியா இடத்தை பிடித்துள்ளது.
இவர் தயாரிப்பில் தற்போது ஹிட் லிஸ்ட் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த வாரம் திரைக்க வரவிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் உச்சத்தை பார்த்த நபர்களில் ஒருவரான இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு ரூ. 70 கோடி அளவிலான சொத்து இருக்கிறது என கூறப்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் அவருக்கு பிரம்மாண்டமான பங்களாக்கள் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டே முக்கால் ஏக்கரில் கப்பல் போல வீடு கட்டி வசித்து வருகிறாராம்.