தயாரிப்பாளராகி கஷ்டப்பட ரஜினி தான் காரணம்! கமலால் நஷ்டமான பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் ரீமேக் படத்தினை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் கே எஸ் ரவிக்குமார். இப்படத்திற்கு பிறகு, புத்தம் புது பயணம், புருஷ லட்சனம், சக்திவேல், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, சூர்ய வம்சம், மின்சாரா கண்ணா, தெனாலி, வில்லன், வரலாறு, தசவதாரம், ஆதவன், லிங்கா போன்ற முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சரத்குமார், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்த படங்களை இயக்கினார்.
இயக்கிக்கொண்டிருந்த கே எஸ் ரவிக்குமார் தெனாலி படத்தின் போது தயாரிப்பில் குதித்து பெரிய நஷ்டத்தை சந்தித்தார். இதுகுறித்து அவர் சமீபத்திய மேடையில் பகிர்ந்து கொண்டார். கமலை சந்தித்து பேசியபோது நான் இரு படங்களில் நடிக்கவுள்ளேன் ஒன்று நான் தயாரிக்கும் ஹேராம் படம் அடுத்தது உங்களுடையது என்று கூறினார்.
நான் இயக்கும் படத்தினை நானே தயாரிக்கிறேன் நீங்கள் இயக்கும் படத்திற்கு தயாரிப்பாளரை பாருங்கள் என்று கூறினார். அதன்பின் சில நிமிடத்தில் நீங்களே தயாரியுங்கள் என்று கூறி ஷாக் கொடுத்தார்.
பின் இதுகுறித்து ரஜினியிடம் இப்படி கமல் கூறுகிறார் என்று தெரிவித்தேன். உடனே பண்ணுங்க ரவி என்று கூறினார். அப்படி தயாரித்த படம் தான் தெனாலி. ஆனால் படம் பிளாப்பானதை எண்ணி ரஜினி பல முறை பீல் செய்தார் என்று கூறியுள்ளா ரவிக்குமார்.
அதன்பின் தான் கூகுல் குட்டப்பா படத்தினை தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.