தொகுப்பாளினி முன்பே கெட்டவார்த்தையில் திட்டிய கே எஸ் ரவிக்குமார்!! ஷாக்கான பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து டாப் நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் தான் கே எஸ் ரவிக்குமார். தற்போது பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சரத்குமாருடன் இணைந்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
செட்டில் பயங்க கடினமாகவும் எல்லாரையும் திட்டுவாறு கெட்ட வார்த்தையெல்லாம் கே எஸ் ரவிக்குமார் சார் பேசுவார் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம் என்று தொகுப்பாளினி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு கே எஸ் ரவிக்குமார் உடனே, கெட்டவார்த்தை யார் பேசவில்லை, இங்கிருந்து வெளிய போனவுடனே பேசுவாங்க நான் பேசுற கெட்ட வார்த்தை எல்லாம் என்று கூறியிருக்கிறார். என்னலாம் பேசுவீங்க என்று கேட்டதும், அதற்கு கே எஸ் ரவிக்குமார் கெட்டவார்த்தையை அப்படியே சொல்லிவிட்டார்.
மேலும் டேய் என்னடா புடிங்கிட்டு இருக்கீங்க, சீக்கிரவா என்று சொல்லுவேன் இதெல்லாம் எனக்கு கெட்டவார்த்தை மாதிரி தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இதனை கேட்ட பக்கத்தில் இருந்த சரத்குமார் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார்.