23 வருட திருமண வாழ்க்கையை இப்படியா கொச்சைப்படுத்துவது.. திட்டி தீர்த்த குஷ்பு!
தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை குஷ்பு. தற்போது இவர் சினிமா வாழ்க்கையை தாண்டி அரசியலில் மும்முரமாக இருந்து வருகிறார்.
குஷ்பு கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
சமீபத்தில் குஷ்பு குறித்து தகவல் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சுந்தர் சுந்தர்சியை திருமணம் செய்து கொள்வதற்காக குஷ்பு மதம் மாறினார் என்று கூறிவந்தார்கள்.
இந்நிலையில் இது பற்றி பேசிய குஷ்பு, விமர்சிப்பவர்கள் கொஞ்சமாவது அறிவுடன் பேசுங்கள்.அது உங்களுக்கு இல்லாததால் தான் என்னுடைய 23 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள்.
நான் மதம் மாறவில்லை. என்னுடைய திருமண வாழ்க்கையில் மரியாதை, அன்பின் அடிப்படையில் உருவானது என்று நெட்டிசன்களை மிகவும் மோசமா திட்டி பேசியுள்ளார்.