நான் திருநங்கையா..என்னதான் டா வேணும்!! விளாசிய குஷ்பூ மகள் அனந்திகா..
அனந்திகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பூ தற்போது, அரசியல் மற்றும் சினிமாவில் குணச்சித்திர ரோல்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
சுந்தர் சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ, அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்களை பெற்று வளர்த்து வருகிறார்கள். மகள்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் ஆரம்பத்தில் உடல் எடையை வைத்து இரு மகள்களையும் கிண்டல் செய்து வந்தனர் நெட்டிசன்கள்.

அதற்கு பதிலடி கொடுத்து இருவரும் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர். அவந்திகா ஓவர் ஸ்லிம்மாக மாறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மற்றொரு மகள் அனந்திகா இயக்குநர் மணிரத்னமிடம் பொன்னியின் செல்வன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் டபுள் ஆக்குபன்ஸி படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியும் உள்ளார்.
நான் திருநங்கையா
சமீபத்தில் அனந்திகா அளித்த பேட்டியொன்றில் உருவகேலி குறித்து பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு 15 வயது இருக்கும்போது ரொம்பவும் குண்டாக இருப்பேன், அப்போது நீ அசிங்கமாக இருக்கிறாய், உன் அம்மாவை பார் , எவ்வளவு அழகாக இருக்காங்க என்று சொன்னார்கள்.

அப்போது நான் ஒரு குழந்தை. ஒரு குழந்தையை பார்த்து கேட்கும் கேள்வியா அது, சரி இப்போ நான் ஒல்லியாக இருக்கிறேன். ஃபிட்டாக இருக்கிறேன், உடலை குறைத்தப்பின், ஏன் இப்போ எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய், திருநங்கை மாதிரி இருக்கிறாய் என்று சொல்கிறார்கள்.
உங்களுக்கு என்னதான் டா வேண்டும் நான் எப்படி இருக்கனும்னு சொல்வதற்கு நீங்கள் யார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.