வாரிசு முடிந்ததும் மருத்துவமனையில் நடிகர் விஜய்!! உண்மையை கூறிய நடிகை குஷ்பூ..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கலவையான விமர்சனத்தை பொதுமக்களிடம் இருந்தும் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிறு ரோலில் நடிகை குஷ்பூ நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கிளைமேக்ஸ் காட்சியில் வாரிசு படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் இணைந்து நடிக்கவிருந்தது. அப்போது காம்பினேஷன் காட்சியில் விஜய் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது.
அப்போது விஜய் கடுமையான 103 டிகிரி காய்ச்சலில் இருந்துள்ளார். தன்னுடைய போஷன் வரும் போது வந்து நடித்தும் பின் கேரேஜில் உறங்கிவிட்டு மீண்டும் நடித்துவிட்டு செல்வார்.
அதன்பின் அடுத்த நாள் விஜய் மருத்துவமனையில் அட்மிட்டாகினார் என்று குஷ்பூ விஜய்யை பற்றி பெருமையுடம் பேசியுள்ளார்.