ஏழ பசங்கங்களுக்கு கொடுக்கல! இதுல சூர்யாவ அடிச்சா 1 லட்சமாம்? திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..
இருளர் சமுகத்தினருக்கு எதிராக நடக்கும் குற்றச்செயலையும் ராஜாகண்ணுவின் உண்மை சம்பவத்தையும் கூறும் வகையில் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி நல்லவரவேற்பை பெற்ற படம் ஜெய்பீம். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சில எதிர்ப்புகள் படத்தின் மீதும் சூர்யா மீதும் எழுந்துள்ளது.
இந்நிலையில் பாமக கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரௌ வைத்து இழிவுபடுத்தும் விதமாக வன்னியரின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியும் கலவரத்தை தூண்டு விதமான படத்தினை எடுத்ததாக குற்றம் சாட்டி புகாரளித்துள்ளனர்.
மேலும் இழிவுபடுத்திய சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறி பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சூர்யா மெளனம் சாதித்து வந்தாலும் ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் பெயரில் டெபாசிட் போட்டுள்ளதாகவும் அதில் வரும் வட்டியை அவரின் செலவுக்காக கொடுக்கப்படும் என்றும் இருளர் சமுதாகத்திற்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.