தயாரிப்பாளர் மரணத்தில் ஆறுதல் சொன்ன போன நடிகை லட்சுமி, கெளதமி!! கெட்ட வார்த்தையில் திட்டிய மனைவி..
லட்சுமி
80, 90களில் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை லட்சுமி. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் லட்சுமி, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்தும் ஒருசில படங்களை இயக்கியும் வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தயாரிப்பாளர் மரணத்தில் அவரது மனைவி சொன்னதை கேட்டு அதிர்ந்தது பற்றி பகிர்ந்துள்ளார். அதில், நானும் நடிகை கெளதமியும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தோம். அப்போது அப்படத்தின் தயாரிப்பாளர் திடீரென இறந்துவிட்டார்.
தயாரிப்பாளர் மனைவி எப்போதும் எங்களிடம், சாப்பிட்டீங்களான்னு கேட்டால், அய்யா சாப்பிடாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லுவாங்க, எல்லாமே அவர் பண்ணா போதும் என்று சொல்லுவாங்க.
தயாரிப்பாளர் மனைவி
அவர் இறந்துவிட்டார் என்று என் மேனேஜர் சொன்னதும் கெளதமியுடன் சொல்லி அங்கு போனோம். அங்கே அந்தம்மா அப்படியே உட்கார்ந்திருக்காங்க.
அம்மா என்று அவர்களை தொட்டோம், உடனே பச்சையா ஒரு கெட்டவார்த்தையில் திட்டி, இந்த நாசமா போறவன் பணத்தை எல்லாம் எங்கே வெச்சேன்னு சொல்லாமல் செத்துட்டான் என்று சொன்னதும் நாங்கள் அதிர்ந்து போனோம் என்று சிரித்தப்படி நடிகை லட்சுமி பகிர்ந்துள்ளார்.