ஸ்கூல் படிக்கும் போது அதை செய்தேன்!! நடிகை லட்சுமி மேனன் ஓப்பன் டாக்
மலையாள சினிமாவில் 15 வயதிலேயே அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தினை தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த தமிழ், மலையாள மொழிகளில் நடித்து வந்த லட்சுமி மேனன், ரெக்க படத்திற்கு பின் ஆள் அடையாளமே தெரியாமல் போனார். படிப்பை தொடர ஆரம்பித்து பின் புலிகுத்தி பாண்டியன் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், யாரிடமாவது காதலை கூறி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு என்னிடம் யாரும் காதல் பிரபோஸ் செய்ததில்லை.
ஆனால் நான் ஒருவரிடம் பள்ளியில் படிக்கும் போது நேராக சென்று லவ் சொல்லியதாகவும் அவரும் ஓகே சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அடிக்கடி பேசுவேன் என்றும் அவுட்டிங் எல்லாம் சென்றதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் வீட்டில் பார்க்கும் நபரை திருமணம் செய்வேன் என்றும் காதல் திருமணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி இருக்கலாம் என்று வெட்கத்துடன் கூறியிருக்கிறார் நடிகை லட்சுமி மேனன்.