55 வயது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இது? மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த லட்சுமி பிரபல தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சி பெரியளவில் டிஆர்பியை கொடுத்தாலும் மக்கள் மத்தியில் பல எதிர்ப்பை பெற்று நீதிமன்றம் வரை சென்று தடை செய்யப்பட்டது. இதையடுத்து படத்தினை இயக்க ஆரம்பித்து 4 படங்களை வெளியிட்டார்.
தற்போது மக்கள் குறைகள் பற்றிய இன்னொரு நிகழ்ச்சியான நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமுகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமுக கருத்துக்களை முன்வைத்து விமர்சனத்திலும் ஈடுபட்டு வருவார்.
இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக 55 வயது நடிகையை போல் இல்லாமல் இளமை தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். ஒல்லியாக மாறி லட்சுமி ராமகிருஷ்ணன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.