ரேகா நாயர் உங்க பிரெண்ட் எங்கம்மா!! பயில்வானை மேடையில் கலாய்த்து தள்ளிய லட்சுமி ராமகிருஷ்ணன்..
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் இருந்து கொண்டு நட்சத்திரங்களை பற்றி அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருவதை பலர் கண்டித்து வருகிறார்கள்.
அதில் கே ராஜன், நடிகர் ராதிகா, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் அவருக்கு எதிராக நேரடியாக சண்டைப்போட்டும் வந்துள்ளனர். சிலர் பயில்வானை கலாய்த்தபடி பேசியும் வருகிறார்கள். அந்தவகையில், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் நடந்த பிரியமுடன் பிரியா என்ற படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயில்வானை கலாய்த்து பேசியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே ராஜன் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் நடிகை ரேகா நாயர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் வந்திருப்பதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜன் சார் பேசிய வீடியோவை பார்க்காமல் இருக்க மாட்டேன்.
நான் வந்ததும் ரேகாவை கேட்டேன், அடேங்கப்பா, எங்கம்மா உங்க பிரெண்ட், பயில்வான் ரங்கநாதனை காணவில்லையே, இருக்காரே எங்கயாது. ராஜன் சாரும் ரேகாவும் இருப்பதால அவர் வரவேயில்ல போலிருக்கு என்று மேடையில் கலாய்த்தபடி பேசி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எங்கப்பா உங்க FRIEND காணோம் ? #Bayilvan-னை? நக்கலடித்து #LakshmyRamakrishnan #shorts pic.twitter.com/qwKTyuuXeo
— D2 Cinemas (@D2Cinemas) May 21, 2023