காதலிக்கிறேன்னு சொன்ன நடிகை!! கமல் ஹாசன் கொடுத்த ரியாக்ஷனால் ஷாக்கான பிரபலம்..
லட்சுமி ராமகிருஷ்ணன்
சொல்லப்போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், ஆதவன், ஆண்மை தவறேல், யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது குக் வித் கோமாளி சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.
அந்நிகழ்ச்சியில் கமல் ஹாசனிடம் காதலி சொன்ன விஷயம் பற்றி பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கல்லூரி படிக்கும் போதிலிருந்து நான் கமல் ஹாசனின் தீவிரமா ரசிகை.
அதுமட்டுமில்லாமல் அவரை காதலிக்கவும் செய்தேன். சினிமாவுக்கு வந்தப்பின் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனது மனதில் இருந்த காதலையும் அவரிடம் சொன்னேன். ஆனால் அவரோ தங்கச்சி என சொல்லி டிவிஸ்ட் கொடுத்துவிட்டார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.