ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு
சமீபகாலமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு விவாகரத்தை அறிவித்த சினிமா நட்சத்திரங்களில் ஒருவர் ஜெயம் ரவி.
தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார். குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி விவாகரத்திற்கு வழக்கு தொடர்ந்தார். பின் இருவரையும் மனம்விட்டு பேச குடும்பநல நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
இதற்காக இருவரும் நீதிமன்றத்தின் ஆஜரான நிலையில் சமாதான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மீண்டும் இருவருக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடக்க, மத்தியஸ்தர் தரப்பில் இருந்து சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
எனவே மீண்டும் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இணைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..