வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணன்.. லீடர் படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ்

Box office Leader
By Kathick Apr 06, 2026 02:30 PM GMT
Report

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதன்பின், தன்னுடைய தோற்றத்தையே மாற்றி மாஸ் ஹீரோவாக லீடர் படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார்.

வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணன்.. லீடர் படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் | Leader Movie Official Box Office

இப்படத்தை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்க லெஜண்ட் சரவணன் தயாரித்திருந்தார். பாயல் ராஜ்புட், ஷ்யாம், ஆண்ட்ரியா, லால் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும் அதனுடைய வசூல் விவரங்கள் குறித்து நாம் பார்ப்போம்.

இந்த நிலையில், லீடர் திரைப்படம் வசூலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், லீடர் திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery