மதுவுக்கு அடிமையாகி மோசமாகிய நடிகர்கள்! அதிலும் இவர்தான் பர்ஸ்ட்..
சினிமாவை பொறுத்தவரையில் பிரபலங்கள் மதுவுக்கு அடிமையாவது அந்த காலகட்டத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. அதிலும் படங்களில் நடிப்பதைவிட மதுதான் முக்கியம் என்று முழுநேரக்குடிக்கார்களாக மாறிவிட்டு சினிமா வாழ்க்கையையே இழப்பார்கள்.
அந்தவரிசையில் முதல் ஆளாக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த விஜயகாந்த், சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தால் எதிலும் அவரால் கலந்து கொள்ளமுடியவில்லை. அதற்கு முதற்காரணமாக இருந்தது மது. தினமும் மது குடிக்கும் பழக்கம் அவர் தொண்டையில் சில மாற்றங்களை ஏறபடுத்தியதால் தான் இந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
அவரை தொடர்ந்து இந்த லிஸ்ட்டில் இருப்பர் மறைந்த நடிகர் கலாபவன் மணி.தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், மிமிக்ரி கலைஞராகவும் திகழ்ந்து சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார். கடந்த 2016ல் உடல் நலக்குறைவால் அவர் மரணமடைந்தார். கடுமையான மதுபழக்கத்திற்கு ஆளாகியது அவர் உயிரை பரிக்க காரணமாகவும் அமைந்துள்ளது.
80, 90களில் காமெடி ஜாம்பவனாக இருந்து கொடிக்கட்டி பறந்தவர் கவுண்டமணி. அவர் இடத்தினை இன்னும் யாரும் பிடிக்காமல் இருக்க அவர் டைமிங் காமெடி சென்ஸ் தான் காரணம். 82 வயதில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஒருசில நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கலந்து கொண்டு வருகிறார். கவுண்டமணி மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவருக்கு போட்டியாக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த வயதில் நடிப்பில் மிகப்பெரிய ஆரவம் கொண்டு நடித்து வரும் ரஜினி ஒருகாலத்தில் மதுவுக்கும் புகைப்பிடிப்பதற்கும் அடிமையாக இருந்ததாக அவரே பல மேடைகளில் கூறியிருக்கிறார். பின் சில உடல் நிலை மாற்றம் காரணமாக அதிலிருந்து விடுபட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜயகுமார் தற்போது படங்களில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹீரோவாக இருக்கும் போது மதுவுக்கு அடிமையாகி படங்களில் நடிப்பதை நிறுத்தினார். பின் அதை முற்றுலுமாக பிள்ளைகளுக்காக விட்டு விட்டார் என்று செய்திகள் கூறப்பட்டது.
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் செல்வனாக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பவராம். மாஸ்டர் படத்தில் கூட குடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. சமீபத்தில் இயக்குனர் மிஸ்கினுடன் கதை கேட்கும் போது கூட இருவரும் மது அருந்தியதாக அவரே கூறினார். இவர்களை தவிர ஒருசிலர் மதுபழக்கத்தில் அடிமையாகி தங்களின் மார்க்கெட்டை இழந்து வருகிறார்கள்.