பாலிவுட் தான் எனக்கு எல்லாமே..ஆனால் தென்னிந்திய சினிமாவில்!! நடிகை சாரா அலி கான் ஓபன்

Bollywood Indian Actress Sara Ali Khan Cinema Update
By Jai May 12, 2026 07:45 AM GMT
Report

சாரா அலி கான்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், வாமிகா கேபி நடித்துள்ள Pati Patni Aur Woh Do என்ற படத்தில் நடித்துள்ளார் சாரா. இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட் தான் எனக்கு எல்லாமே..ஆனால் தென்னிந்திய சினிமாவில்!! நடிகை சாரா அலி கான் ஓபன் | Learn Acting Techniques South Movies Sara Ali Khan

தென்னிந்திய சினிமா

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், பாலிவுட் சினிமா தான் எனக்கு எல்லாமே, எனக்கான புகழ், பெருமை இங்கிருந்து தான் கிடைத்தது.

அதே நேரத்தில், ஒரு நடிகையாக பிற மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. குறிப்பாக தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அங்குள்ள நடிப்பு யுக்திகளையும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்திய சினிமாவில் பாலிவுட்டிற்கு அடுத்ததாக தென்னிந்திய சினிமா மீது எனக்கு தனி ஈர்ப்பு இருக்கிறது என்று சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.