3 மணி நேர ஜனநாயகன் படமும் லீக்!! வேதனையில் இயக்குநர் எச் வினோத்...

Vijay Gossip Today H. Vinoth JanaNayagan
By Edward Apr 10, 2026 07:15 AM GMT
Report

ஜனநாயகன்

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஜனநாயகன். பொங்கல் அன்று இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் படம் தள்ளிபோயுள்ளது.

3 மணி நேர ஜனநாயகன் படமும் லீக்!! வேதனையில் இயக்குநர் எச் வினோத்... | Legal Action For Illegal Circulation Jananayagan

இதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தணிக்கை குழுவினர் கூறினர். இதனையடுத்து படம் தேர்தல் முடிந்தப்பின் தான் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.

இயக்குநர் எச் வினோத்

இந்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் சில நபர்களால் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இணையத்தில் லீக்கானது. இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து டிரெண்ட்டாக்கி வந்தனர்.

3 மணி நேர ஜனநாயகன் படமும் லீக்!! வேதனையில் இயக்குநர் எச் வினோத்... | Legal Action For Illegal Circulation Jananayagan

ஆனால் இன்று முழு ஜனநாயகன் படமும் இணையத்தில் கசிந்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனையறித்த படக்குழுவினர், இதை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஜனநாயகன் படத்தின் சட்டவிரோத வெளியீட்டு காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம். ஜனநாயகன் காட்சிகளை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டாலோ, அதை ரீபோஸ்ட் செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 மணி நேர ஜனநாயகன் படமும் லீக்!! வேதனையில் இயக்குநர் எச் வினோத்... | Legal Action For Illegal Circulation Jananayagan

மேலும் படத்தின் இயக்குநர் எச் வினோத், ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவை சுமந்துள்ளது. வெளியீட்டிற்கு முன் அது கசிவது உண்மையிலேயே வேதனையானது. தயவுசெய்து அதைப் பகிராமல் ஆதரவளியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery