யாருக்காக இப்படி எல்லாம் செய்கிறார் விஜய்.. அரசியலுக்காக எடுத்த அதிர்ச்சி முடிவு
Vijay
Leo
By Parthiban.A
விஜய் மட்டும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்திருக்கும் லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படம் தொடங்கியதில் இருந்து பல விதமான அப்டேட்டுகள் வந்து ரசிகர்களை கொண்டாட வைத்து கொண்டிருக்கிறது.
காஷ்மீரில் நடந்த ஷூட்டிங்கை தொடர்ந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
லியோ சென்னையில் இல்லை..
இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறாது, வெளியில் தான் நடைபெறும் என தயாரிப்பாளர் லலித் குமார் கூறி இருக்கிறார்.
மற்ற இடங்களில் இருக்கும் ரசிகர்களையும் சந்திக்க விரும்புவதாக விஜய் கூறியதால் தான் இப்படி ஒரு முடிவு எனவும் லலித் குமார் கூறி இருக்கிறார்.
விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியலில் இறங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்காக தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா விஜய்.