அந்த இடத்தில் மண்ணை கவ்விய லியோ!! ஆனா 200 கோடி வசூலாம்..

Karnataka Gossip Today Leo
By Edward Oct 21, 2023 06:15 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி வெளியான லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் பல சிக்கல்களை சந்தித்து வந்த லியோ முதல் காட்சியிலேயே படத்தின் விமர்சனம் மோசமான கருத்துக்களை பெற்று வருகிறது. மோசமான விமர்சனம் பெற்றாலும் லியோ படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.

அப்படி இரண்டாம்பாதி சொதப்பியதாகவும் அடுத்த மூணாவது ப்ளாப் படத்தை கொடுத்துவிட்டார் விஜய் என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும் கர்நாடகாவில் மிகப்பெரிய பிளாப்பை சந்தித்திருக்கிறார் விஜய்.

முதல் நாளில் 14 கோடி வசூல் பெற்றது. அதேபோல் இரண்டாம் நாள் 4 கோடியையும் வசூல் செய்துள்ளது. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு லியோ கர்நாடகாவில் வசூலை ஈட்டவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.