தெலுங்கில் லியோ படத்திற்கு வந்த சிக்கல்.. ஆனால்
லியோ
ஒரு பக்கம் லியோ படத்திற்கு பல பாசிட்டிவான விஷயங்கள் நடந்தாலும், மறுபக்கம் சில நெகடிவ்வான விஷயங்கள் நடைபெற்று வருகிறது.
அப்படி தான் தற்போது லியோ படத்திற்கு தெலுங்கு இண்டஸ்ட்ரியில் தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது ஏன், எதற்காக என்ற விவரத்தை பார்க்கலாம். விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வாரிசு.
இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிருந்தார். வாரிசு படத்தின் தமிழக உரிமையை தற்போதைய லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வாங்கி இருந்தார்.
திடீர் சிக்கல்
வாரிசு படத்தின் தமிழக உரிமையை லலித் வாங்கியதை தொடர்ந்து அதில் ஏற்பட்ட கொடுத்தல் வாங்குதல் விஷயத்தில் லலித், தில் ராஜு இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந்த விஷயத்தை தற்போது லியோ படம் வெளியாகும் நிலையில், தில் ராஜு தெலுங்கு சினிமா சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது லியோ படத்திற்கு தெலுங்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுகுறித்து தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் லலித் குமார் பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து லியோ படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள தடையை நீக்கி படத்தை தெலுங்கில் வெளியிட வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.