லிங்குசாமி படத்திற்கு இவ்ளோ மவுசா.. அதிர வைத்த டப்பிங் ரைட்ஸ் விலை

Lingusamy The Warrior
By Parthiban.A Jan 27, 2022 01:30 PM GMT
Report

சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படம் மண்ணை கவ்வியத்தால் கடும் கடனில் சிக்கிக்கொண்டார் லிங்குசாமி. அதன் பிறகு தமிழ் படம் எதுவுமே அவர் இயக்கவில்லை. தற்போது தெலுங்கில் ஒரு படம் இயக்கி ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார் அவர்.

'தி வாரியர்' என்ற போலீஸ் கதையை தான் அவர் இயக்கி உள்ளார். ராம் பொத்தினேனி ஹீரோவாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை மட்டும் 16 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. லிங்குசாமி படத்திற்கு இவ்ளோ மவுசா என அனைவரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். பல டாப் ஹீரோக்கள் படங்களே அந்த விலைக்கு போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

லிங்குசாமி படத்திற்கு இவ்ளோ மவுசா..  அதிர வைத்த டப்பிங் ரைட்ஸ் விலை | Lingusamy The Warrior Hindi Dubbing For Huge Price