ஷாருக்கானை ஓரங்கட்டிய 82 வயது நடிகர்!! டாப் இடத்தில் விஜய்..எந்த விஷயத்தில் தெரியுமா?

Vijay Shah Rukh Khan Salman Khan Amitabh Bachchan Income Tax Department
By Edward Mar 19, 2025 02:30 PM GMT
Report

அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகராக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகை அமிதாப் பச்சன். தற்போது இந்த வயதிலும் படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார்.

ஷாருக்கானை ஓரங்கட்டிய 82 வயது நடிகர்!! டாப் இடத்தில் விஜய்..எந்த விஷயத்தில் தெரியுமா? | List Of Highest Taxpayers Amitabh Bachchan Vijay

அவரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், 'கோன் பனேகா குரோர்பதி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால், அதன்மூலம் சுமார் ரூ. 350 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறார்.

கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரூ. 92 கோடி வரி செலுத்தி, வருமான வரி அதிகம் கட்டிய பிரபலமாக திகழ்ந்தார். இந்த ஆண்டு 82 வயதான அமிதாப் பச்சன் ஷாருக்கானைவிட 30 சதவீதம் வருமான வரி செலுத்தி டாப் இடத்தினை பிடித்திருக்கிறார்.

ஷாருக்கானை ஓரங்கட்டிய 82 வயது நடிகர்!! டாப் இடத்தில் விஜய்..எந்த விஷயத்தில் தெரியுமா? | List Of Highest Taxpayers Amitabh Bachchan Vijay

நடிகர் விஜய்

அதாவது ரூ. 120 கோடி வரி செலுத்தியதால் ஷாருக்கானை மிஞ்சியிருக்கிறார். மேலும் நடிகர் விஜய் 80 கோடி வரி செலுத்தி 3வது இடத்திலும் சல்மான் கான் ரூ.75 கோடி வரியையும் செலுத்தி 4வது இடத்தினை பிடித்திருக்கிறார்.