என் அப்பா சாவுல கைத்தட்டி கொண்டாடினாங்க!! மன அழுத்தத்தில் நடிகர் பிரித்விராஜ்..
பிரித்விராஜ்
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரித்விராஜ். மக்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தினை பிடித்துள்ள பிரித்விராஜ், எம்புரான் லூசிபர் 2 படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியிகளில் கலந்து கொண்டு வருகிறார். தனது தந்தையின் மறைவு குறித்து எமோஷனலாக சில விஷங்களை பகிர்ந்துள்ளார்.
என் அப்பா சாவுல கைத்தட்டி
என்னைப் பொறுத்தவரை பிரபங்கள் மரணமடைந்துவிட்டால், அங்கு ரசிகர்களை அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் என் அப்பா இறந்தபோது உடலை எங்கள் விடிடில் நாங்கள் வைத்துள்ளோம்.
பல நடிகர்கள், மலையாள திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வந்துக்கொண்டிருந்தனர். எங்கள் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயிருந்தனர். நான் எல்லாம் பெரும் மன வேதனையில் இருக்கிறேன்.
அப்போது வீட்டிற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த ரசிகர்கள், மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்களை பார்த்ததும் ஆரவாரம் செய்து கைத்தட்டி விசில் அடித்தனர். அப்போது என் மனநிலை, என் குடும்பத்தின் மனநிலை குறித்து ரசிகர்கள் யாருமே யோசிக்கவில்லை என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் பிரித்விராஜ்.