நயன்தாராவுடன் சிங்கம் வேட்டையாடுற மாதிரிதான் வாழ்ந்துட்டு இருக்கேன்!! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்..

Nayanthara Vignesh Shivan Life Style
By Edward Apr 15, 2026 11:45 AM GMT
Report

விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் ரிலீஸான படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

நயன்தாராவுடன் சிங்கம் வேட்டையாடுற மாதிரிதான் வாழ்ந்துட்டு இருக்கேன்!! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.. | Living Like A Lion With Nayanthara Vignesh Shivan

அனிருத் இசையில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 5 நாட்களாகிய நிலையில் கிட்டத்தட்ட ரூ.44 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

படத்தின் பிரமோஷனுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

சிங்கம் வேட்டையாடுற மாதிரி

அதில், நானும் நயன் தாராவும் காதலிக்கும் போதிலிருந்தே ஒரு தீர்மானத்தை பின்பற்றுகிறோம். அது என்னவென்றால் சிங்கம் வேட்டையாடுவது போல வாழ வேண்டும் என்பதுதான் அது. அதாவது வருடத்தில் இருக்கும் 365 நாட்களில் 265 நாட்கள் வேலை செய்யலாம், ஆனால் 100 நாட்கள் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நமக்காக நாம் நேரம் செலவிட வேண்டும் என்பதுதான்.

நயன்தாராவுடன் சிங்கம் வேட்டையாடுற மாதிரிதான் வாழ்ந்துட்டு இருக்கேன்!! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.. | Living Like A Lion With Nayanthara Vignesh Shivan

இது எப்படி என்றால், சிங்கம் காட்டில் தனக்கான இறையை வேட்டையாடி சாப்பிட்டப்பின் அதன் முன் நாம் சென்று நின்றால்கூட அது நம்ம வேட்டையாடாது. காரணம் அது ஏற்கனவே வேட்டையாடி சாப்பிட்டுவிட்டது. அதுபோலத்தான் வாழ வேண்டும்.

நயன்தாராவுடன்

நமக்கு என்ன தேவையோ, அதையெல்லாம் அந்த 265 நாட்களுக்குள் செய்துவிட்டு மீதமுள்ள 100 நாட்களை நமக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறோம். இதனை நாங்கள் காதலிக்கும் நாட்களில் இருந்தே பின்பற்றி வருகிறோம்.

நயன்தாராவுடன் சிங்கம் வேட்டையாடுற மாதிரிதான் வாழ்ந்துட்டு இருக்கேன்!! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.. | Living Like A Lion With Nayanthara Vignesh Shivan

அதற்காக பணக்காரராக இருக்க வேண்டும், கோடீஸ்வரராக இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. 265 நாட்களில் மிகவும் தீவிரமாக வேலை செய்வோம். அதன்முலம் கிடைக்கும் பணத்தை வைத்து அந்த 100 நாட்களில் நாங்கள் செலவிட வேண்டும். அதன்பின் அடுத்த 265 நாட்களுக்காக வேலை செய்வோம் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.