முதலமைச்சர் விஜய்யின் நான் MLA சீட் கேட்டேனா? முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்...

Lokesh Kanagaraj Bussy Anand C Joseph Vijay
By Jai Aug 21, 2026 05:00 AM GMT
Report

இயக்குநராக இருந்து தற்போது நடிகராகவும் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். DC படத்தில் நடித்த லோகேஷ் மிகப்பெரிய விமர்சனத்தையும் வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் லோகேஷ் கனகராஜ் விஜய்யிடம் எம் எல் ஏ சீட் கேட்டாரா? என்ற கேள்வி சோசியல் மீடியாகளில் பலமக பேசப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் விஜய்யின் நான் MLA சீட் கேட்டேனா? முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்... | Lokesh Kanagaraj Clarifies Kinathukadavu Mla Seat

MLA சீட் கேட்டாரா லோகேஷ்

அதாவது நடந்து வரும் சட்டமன்ற பேரவையின் போது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், விஜய்யை வைத்து படம் எடுத்த இயக்குநர் ஒருவர், இப்போதும் பிரபலமாக இருக்கும் இயக்குநராகத்தான் இருக்கிறார். அவர் ஒரு தொகுதியை விஜய்யிடம் கேட்டார்.

அதற்கு எங்கள் தலைவரோ, இல்லை நண்பா கோபித்துக் கொள்ள வேண்டாம், அந்தத்தொகுதி என்னுடைய மாவட்ட செயலாளருக்குத்தான் என்று தொட்டவட்டமாக கூறிவிட்டார். அமைச்சர் அப்படி பேசும்போது ஒரு எம் எல் ஏ, தன் பக்கத்தில் இருந்தவரிடம், எம் எல் ஏ விக்னேஷை நோக்கி கை காண்பித்து இவர்தான் என்று சொல்லியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் நான் MLA சீட் கேட்டேனா? முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்... | Lokesh Kanagaraj Clarifies Kinathukadavu Mla Seat

இதை பார்த்த நெட்டிசன்களோ, ஓஹோ விக்னேஷ் போட்டியிட்டு வென்ற தொகுதி கிணத்துக்கடவு, லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரும் கிணத்துக்கடவு தான் என்று கூறி வருகிறார்கள்.

இதற்கு தற்போது லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் ஏன் அதைக் கேட்க வேண்டும் என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார். மேலும், புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட நபர், நான் இல்லை என்றும் அவர் வேறு யாரையாவது குறிப்பிட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளர்.