விஜய் உடன் சண்டையா? இயக்குனர் லோகேஷ் முதல் முறையாக சொன்ன பதில்
Vijay
Lokesh Kanagaraj
Leo
By Parthiban.A
லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் சூழலில் சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரெய்லர் ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்து வருகிறது. ஜெயிலர் பட ட்ரெய்லர் பெற்ற மொத்த பார்வைகளையும் லியோ ட்ரைலர் 24 மணி நேரத்திற்கு முன்பே பெற்று சாதனை படைத்தது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்க்கனவே ரத்து செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் விஜய்க்கும் சண்டை எனவும் அப்போது செய்தி பரவியது.
லோகேஷ் விளக்கம்
இந்நிலையில் இது பற்றி லோகேஷ் பேட்டியில் பேசி இருக்கிறார். 'எங்களுக்குள் சண்டை என செய்தி வந்தது. அதனை ஒன்றாக அமர்ந்து தான் பார்த்து சிரித்தோம்' என லோகேஷ் கூறி இருக்கிறார்.
அதனால் சண்டை நடந்ததாக பரவிய செய்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.