என் மனைவி பத்தி கேட்காதீங்க!! மேடையில் கடுப்பாகிய லோகேஷ் கனகராஜ்..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தினை தொடர்ந்து ரஜினிகந்தின் 171வது படத்தினை இயக்க காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கமல் பாடல் வரிகையில், ஸ்ருதி ஹாசன் நடித்து பாடிய இனிமேல் பாடல் ஆல்பத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த அந்த பாடல் நேற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பாடல் வெளியீட்டு விழாவிற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளனர். பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷிடம், இயக்குனராக உங்களை பார்த்த உங்கள் மனைவி, நடிகராக பார்க்கும் போது என்ன ரியாக்ஷன் பண்ணுவார்கள், என்ன சொல்வார்கள் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு லோகேஷ் கனகராஜ், ஆரம்பத்தில் இருந்தே பொதுவாக என் தனிப்பட்ட கேள்விகளை ஒதுக்கி வருகிறேன். அதை பற்றி மட்டும் இனிமேல் பேச விரும்பவில்லை, ஏனென்றால், நான் சினிமாவிற்குள் வரும் போதே அது வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
எனக்கும் உங்களுக்குமான நேரடி தொடர்பு இருக்கனும் என்று நினைக்கிறேன். பாராட்டுவதாக இருந்தாலும் சரி, விமர்சிப்பதாக இருக்கட்டும் அதுவே போதும் என்று நினைக்கிறேன். என் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியக்கூடாது என்று நினைக்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
You May Like This Video