லண்டன் மாப்பிள்ளைக்கு டிமிக்கு கொடுத்த நடிகை அஷு ரெட்டி!! ரூ.9.35 கோடி போச்சே..
அஷு ரெட்டி
கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறி லண்டன் மென்பொருள் பொறியாளரிடம் ரூ. 9.35 கோடி மோசடி செய்த புகாரில், பிரபல நடிகை அஷு ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஐதராபாத் போலிசார் வழக்கு பதிவு செய்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக திட்டமிட்டு பணம், நகை, சொத்துக்களை பறித்த நடிகை, இறுதியில் அந்த இளைஞரை மிரட்டியுள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.

2020 முதல் 2025 வரை நடிகை அஷு ரெட்டி பல காரணங்களை கூறி அந்த பொறியாளரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுள்ளார். நடிகையின் தொடர் வற்புறுத்தல், நெருக்கடி காரணமாக சொத்துக்கள், சொகுசு வாகனங்கள், விலையுயர்ந்த தங்க நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளார்.
ரூ. 9.35 கோடி
தன் வருங்கால மனைவி என்ற நம்பிக்கையில் ரூ. 9.35 கோடி சொத்து, பணத்தை அஷு ரெட்டிக்கும் அவரது குடும்பத்துக்கும் லண்டன் மாப்பிள்ளை வாரி வழங்கியிருக்கிறார்.
ஆனால் நடிகையோ கல்யாண பேச்சை எடுக்காமலும், எப்போது கல்யாணம் என்று கேட்டால் மழுப்பு பதிலளித்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். 2025ல் நடிகையின் போக்கில் மாற்றம் ஏற்பட, தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தினால் உங்கள் மீது பொய்யான வழக்குகள் போட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

அத்துடன் அந்த பொறியாளருடன் பேச்சுவார்த்தையை நிறுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளான லண்டன் மாப்பிள்ளை ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நிலைகுலைந்து போயுள்ளார். அதன்பின் போலிஸ் வரை செல்ல முடிவெடுத்தாராம். இந்த புகாரின் பெயரில் நடிகை அஷு ரெட்டி, அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஐதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.