சிம்புவையே காப்பி அடிச்ச நடிகை! ஒது வேற லூப்பா இருக்கும்..

simbu maanaadu Taapsee Pannu lpplapeda
By Edward Feb 06, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் தனுஷிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை டாப்சி பண்ணு. இதையடுத்து தமிழில் படங்கள் கிடைக்காமல் அக்கடதேசத்துக்கு ஓடினார். அங்கும் செட்டாகவில்லை என்று பாலிவுட் நடிகையாக தன்னைத்தானே மாற்றி வருகிறார்.

நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போல்ட் கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் டாப்சி லூப் லபெட்டா என்ற லூப் படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் அப்படியே கதை மாற்றி சிம்புவின் மாநாடு பாணியில் அமைந்துள்ளதாம்.

காதல் ஜோடிகளுக்கு ஏற்படும் பிரச்சனையில் காதலன் மரணிக்கிறான். அவரை காப்பாற்ற பயன்படும் அம்சமாக லூப் அமைகிறது. நடக்கும் தவறுகளை திருத்திக்கொண்டு காதலனை மீட்டு சேருவதுதான் படமாக இருக்கிறது. ஏற்கனவே மாநாடு பார்த்த நமக்கு இது புதியதாக இருக்கலாம் பாலிவுட் ரசிகர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?..