கவினின் திருமணம்.. இப்போ அவரை தினமும் மிஸ் பண்றேன்.. முதன்முறையாக மனம்திறந்த லாஸ்லியா
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவின் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் பிக் பாஸ்ஸில் இருந்து வெளியே வந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டதாக கூறினர்கள்.
நடிகர் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பேசிய லாஸ்லியா, கவினுக்கு திருமணமான விஷயம் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய சினிமா வளர்ச்சி பெரிய அளவில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
அப்போது லாஸ்லியாவிடம், நீங்கள் எந்த விஷயத்தில் உடைந்தீர்கள் என கேள்வி கேட்டப்பது. பதில் அளித்த அவர் என்னுடைய அப்பா விஷயம் தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாலும் ஒருவரின் இடத்தை இன்னொரு நபரால் எப்போதும் மாற்ற முடியவில்லை. தினமும் நான் ஒரு விஷயம் மீஸ் செய்கிறேன் என்றால் அது என்னுடைய அப்பாவை தான் என்று கூறியுள்ளார்.