என்னைப் பொறுத்தவரை இதுதான்!.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து லாஸ்லியா ஓபன் டாக்
இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா, கவினுடன் நெருக்கமாக பழகி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்.ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பின் இருவரும் பிரிந்து அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லாஸ்லியா, இடம் உங்களை பொறுத்தவரை லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.
பதிலளித்த லாஸ்லியா "என்னைப் பொறுத்தவரை நான் அதை பண்ணுவேனா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் வளர்ந்தது கிராமத்தில் தான்.
அங்கிருந்து வந்ததினால் எனக்கு தெரியவில்லை. அதை பண்ணுவது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், என்னால் அதை பண்ணமுடியுமா என்று கேட்டால், கேள்வி குறிதான்" என்று லாஸ்லியா பேசியுள்ளார்.