என் புருஷனால் 4 மாச குழந்தை இறந்துவிட்டது..ஒரு நாளுக்கு 500!! பாடகி கெனிஷாவின் கண்ணீர் பேச்சு..

Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Jai May 15, 2026 06:30 AM GMT
Report

பாடகி கெனிஷா

நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்த விவகாரம் கடந்த ஆண்டு முதல் பேசுபொருளாகி வருகிறது. தன்னுடைய தோழியும் பாடகியுமான கெனிஷா பிரான்சிஸுடன் பல இடங்களுக்கு செல்வதையும் பலரும் விமரிசித்து வந்தனர்.

இந்நிலையில் முதன்முறையாக கெனிஷா இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு வீடியோகளை பகிர்ந்துள்ளார்.

என் புருஷனால் 4 மாச குழந்தை இறந்துவிட்டது..ஒரு நாளுக்கு 500!! பாடகி கெனிஷாவின் கண்ணீர் பேச்சு.. | Lost My 4 Month Baby Sang In Bars For 500 Kenishaa

4 மாச குழந்தை

அதில், என் பெயர் கெனிஷா, நான் என்னுடைய அம்மாவை 2013ல் இழந்தேன், அப்பாவும் 2017ல் இறந்துவிட்டார். நான் 4வது படிக்கும்போதே என்னுடைய உறவுக்காரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு அளாக்கப்பட்டேன். 18, 19 வயது இருக்கும்போது எனக்கு கல்யாணம் நடந்தது, அப்போது எனக்கு எதுவும் தெரியாது.

திருமணத்திற்குப்பின் என்னுடைய கணவர் என்னை மிகவும் மோசமாக அடித்தார், அதனால் என்னுடைய வயிற்றில் இருந்த 4 மாத குழந்தை இறந்துவிட்டது. என்னுடையை அடி வயிற்றில் இருந்து ரத்தம் வந்துக்கொண்டே இருந்தது. அந்த வலியிலிருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை.

என்னுடைய அம்மா, அப்பா, குழந்தை என எல்லாரையும் இழந்துவிட்டேன். அதன்பின் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறினேன். நான் என்னை மீண்டும் கட்டியெழுப்பிக் கொள்ளத்தொடங்கினேன். ஆமா, நான் பார்களில் பாடியவள் தான், ஒரு இரவுக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள், எனக்கு அது பெரிய விஷயம். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது, அதில் என்ன தவறு இருக்கிறது.

என் புருஷனால் 4 மாச குழந்தை இறந்துவிட்டது..ஒரு நாளுக்கு 500!! பாடகி கெனிஷாவின் கண்ணீர் பேச்சு.. | Lost My 4 Month Baby Sang In Bars For 500 Kenishaa

என்னைப்பற்றி பேசுபவர்கள் பலருக்கும் அறிவே இல்லை என்று தோன்றுகிறது. என்னைப்பற்றி எதுவெல்லாம் பேசுகிறீர்கள், எனக்கு 4, 5 குழந்தைகள் இருக்கிறது, நான் ஆண்டி, என்னுடைய அப்பாவை முதியோ இல்லத்தில் விட்டுவிட்டு ரவி மோகனுடன் சுற்றிக்கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். ரவி மோகனை முதலில் சந்தித்தபோது அவர் மனதளவில் மிகவும் பாதிகப்பட்ட நிலையில் இருந்தார்.

தன்னால் தெரபிஸ்டாக சில ஆலோசனைகள் மட்டுமே வழங்கினேன். பின் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. ஒரு குழந்தையை வயிற்றிலேயே இழந்த ஒருவர் இன்னொருவரின் குடும்பத்தை கெடுக்க நினைப்பாரா? தன்னுடைய வாழ்க்கையை குறிவைத்து பேசுபவர்கள் தங்களது வாழ்க்கையை கவனிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் கெனிஷா.