எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை.. ரூ. 100 கோடி வசூல் செய்யுமா LiK..
Box office
Love Insurance Kompany
By Karthick Raja
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் Love insurance kompany.
இது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் 4வது திரைப்படமாகும். இதற்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தன.

இதனால் LiK திரைப்படமும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்யவில்லை.
கலவையான விமர்சனங்களை சந்தித்த LiK திரைப்படம் இதுவரை ரூ. 57.5 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இப்படம் ரூ. 100 கோடியை தொடுகிறதா என்று.