சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடி.. அவருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குமோ

Sivakarthikeyan Lyca Productions Don release date
By Parthiban.A Feb 01, 2022 08:30 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய காலத்தில் வித்யாசமான/ காமெடியான கதைகளாக தேர்வு செய்து நடித்து சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்தார். ஆனால் அதற்கு பிறகு மாஸ் ஹீரோவாக நடிக்கிறேன் என சொல்லி பில்டப் கொடுத்து அவர் நடித்த ஹீரோ, சீமராஜா படங்கள் அதிகம் வரவேற்பை பெறாமல் போய்விட்டன.

அதன் பிறகு டாக்டர் படம் ஹிட் ஆனதால் அவர் பேக் டு த ஃபார்ம் என அவரது ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் அவரது அடுத்த படமான டான் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் ரிலீஸ் தேதி 2022 மார்ச் 25 என தெரிவித்து இருந்தனர்.

தியேட்டர்கள் விரைவில் 100 சதவீதம் இருக்கை பயன்படுத்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் பல பெரிய படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர். ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 வரும் என அறிவித்துவிட்டனர்.

டான் படத்தை தயாரித்த லைகா தான் ஆர்ஆர்ஆர் படத்தையும் வெளியிட இருக்கிறது. அதனால் டான் படத்தை வேறு தேதிக்கு மாற்றிவிடுவார்கள் என தெரிகிறது. சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறதோ.