என்னை கட்டாயப்படுத்தி தான் அஜித்துக்கு ஜோடியா நடிக்க வச்சாங்க..பிரபல நடிகை பகீர் பேட்டி

Ajith Kumar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 07, 2023 11:52 AM GMT
Report

நடிகர் அஜித்தின் கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தான் காதல் மன்னன். கடந்த 1998 -ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

இப்படத்தில் ஹீரோயினாக மானு நடித்திருப்பார். மேலும் விவேக், கரண், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

என்னை கட்டாயப்படுத்தி தான் அஜித்துக்கு ஜோடியா நடிக்க வச்சாங்க..பிரபல நடிகை பகீர் பேட்டி | Maanu Speak About Kadhal Mannan Movie

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மானு, என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் சினிமாவில் இருந்ததில்லை.

பெரும்பாலானோர் டாக்டர்கள் தான். நான் பள்ளியில் படித்து கொண்டு இருந்த போது விவேக்கும், சரணும் என்னை கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தார்கள்.

அந்த படத்திற்கு பின் சினிமாவில் இருந்த விலகி படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதன் பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டேன் என்று மானு கூறியுள்ளார்.