ஜான் விக்-கா இல்ல மாறனா.. ஹாலிவுட் படத்தை அப்படியே காப்பியடித்த தனுஷ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் புதிதாக நடித்துள்ள திரைப்படம் மாறன். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ள இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இன்று பொங்கல் ஸ்பெஷலாக மாறன் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர். ஆனால், இந்த மோஷன் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இது மாறன் படமா..? இல்ல ஹாலிவுட்டில் வெளிவந்த ஜான் விக் படமா.. என்று கேட்டு வருகின்றனர்.

ஏனென்றால், ஜான் விக் படத்தில் எப்படி தன்னை எதற்கும் அனைவரையும் கொள்வாரா, அதே போல் இந்த மோஷன் போஸ்டரில் தனுஷ் தன்னை எதிர்க்கும் அனைவரையும் கொள்கிறார். குறிப்பாக கட்டை, அருவாள் எடுத்து வரும் எதிரிகளை, எழுத பயன்படுத்தும் பேனாவை வைத்து குத்தி கொள்கிறார் தனுஷ்.

இது அப்படியே ஜான் விக் படத்திலிருந்து சுட்ட கான்சப்ட் என்று அப்பட்டமாக தெரிகிறது. ஏனென்றால், ஜான் விக் படத்தில், ஒரே ஒரு பென்சிலை வைத்துக்கொண்ட தன்னை எதிர்க்கும் எதிரிகளை கொன்று குவிப்பார் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.  


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்