தனுஷின் ரீல் மகன் ராகவனா இது! இப்படி வளர்ந்துட்டாரே..
ஒரு படத்தில் நடித்து அப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலே போது அப்படத்தில் நடித்த அனைவரும் பிரபலமாகி விருவார்கள். அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரங்களும் ஒன்று. அப்படி குழந்தை நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் மார்க்கெட் தற்போதைய தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் ரெக்க படத்தின் சிறுவனாக அறிமுகமாகியவர் ராகவன். இதையடுத்து விஜய்சேதுபதியின் சேதுபதி படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருந்தார். இதன்பின் தனுஷின் மாறி படத்தில் அவருக்கு மகனாக நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
பாஸ்கர் ஒரு ராஸ்கல், பா பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் விளம்பர படங்களில் நடித்து வரும் ராகவன் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
தற்போது ஆள் அடையாளம் தெரியாதவாறு வளர்ந்துள்ளார். சமீபத்தில் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாறி மகன் காளியா இது என ஷாக்காகி வருகிறார்கள்.