இயக்குனர் ஷங்கர் மனைவியை அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்
மாவீரன் இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் ரிலிஸாகவுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தை மலேசியாவில் ப்ரோமோட் செய்ய சிவகார்த்திகேயன் நேற்று சென்றுள்ளார்.
ஆனால், அவர் சென்ற இடத்தில் மிகப்பெரும் தலைவலியையும் அவர் சந்தித்துள்ளார், சிவகார்த்திகேயன் மலேசியாவில் அங்கிருக்கும் தன் ரசிகர்களிடமே இந்த நிகழ்ச்சியை நடத்த கூறியுள்ளார்.
பிரச்சனையே இங்கு தான், ஆம், அவர்கள் பல இடங்களில் சொதப்பியுள்ளனர், சிவகார்த்திகேயனை அழைத்து வர கூட எந்த ஒரு வாகனத்தையும் அனுப்பவில்லையாம்.
அதோடு, மிக சாதரண ஹோட்டலில் ரூம் போட்டுள்ளார்களாம், இதெல்லாம் விட அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி ஷங்கர் அம்மாவிற்கு நடந்தது தான் பெரும் கொடுமையாம்.
தன் மகளுக்கு துணையாக வந்த அவரை எகனாமி க்ளாஸ் டிக்கெட்டில் அமர வைத்துவிட்டார்களாம், படத்திலேயே பல பிரமாண்டத்தை காட்டும் ஷங்கரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பலரும் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.